/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு ; 60 டாக்டர்களுக்கு 7 பேர் மட்டுமே உள்ளனர்
/
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு ; 60 டாக்டர்களுக்கு 7 பேர் மட்டுமே உள்ளனர்
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு ; 60 டாக்டர்களுக்கு 7 பேர் மட்டுமே உள்ளனர்
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு ; 60 டாக்டர்களுக்கு 7 பேர் மட்டுமே உள்ளனர்
ADDED : நவ 06, 2024 05:27 AM
பரமக்குடி, நவ.6- பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 60 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 7 பேர் மட்டுமே உள்ளதால் நோயாளிகள் தினமும் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
பரமக்குடி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 60 டாக்டர்களை நியமிக்க வேண்டும். குறைந்தபட்சம் தாலுகா அரசு மருத்துவமனைக்கு தேவையான 21 டாக்டர்கள் கூட பணியில் இல்லாத சூழல் நிலவுகிறது.
இதன்படி சர்ஜன், கண் டாக்டர், குழந்தைகள் பிரிவு, மகப்பேறு, மயக்கவியல் பிரிவுகளில் 9 டாக்டர்கள் தற்போது பணியில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதிலும் 2 டாக்டர்கள் மண்டபம், திருவாடானை அரசு மருத்துவமனை என மாற்றுப்பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.
பரமக்குடியில் தினமும் ஏராளமான புற நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். இதே போல் மகப்பேறு மற்றும் உள்நோயாளிகள் என 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இதனால் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை உட்பட குறைந்தபட்ச அளவிலான சிகிச்சையும் கிடைப்பது கேள்விக்குறியாக வருகிறது.
மேலும் அதிகப்படியாக விபத்துக்கள் நடக்கும் பகுதியாக இருப்பதால் முதலுதவி சிகிச்சைக்கும் டாக்டர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனை தவிக்கிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள 10 அரசு மருத்துவமனைகளில் 97 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 37 பேர் மட்டும் பணியாற்றுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பரமக்குடி அரசு மருத்துவமனையை நம்பி செல்லும் பலரும் சிகிச்சை கிடைக்காமல் வேதனையுடன் மதுரை, ராமநாதபுரம் தனியார் மருத்துவமனை செல்கின்றனர்.
எனவே பரமக்குடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களை நியமித்து பொதுமக்களின் வேதனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.