/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பெருமாள் கோயிலில் நாளை பகல் பத்து உற்ஸவம் ஜன.10ல் சொர்க்கவாசல் திறப்பு

ADDED : டிச 30, 2024 08:00 AM

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை (டிச., 31) காலை திருஅத்யயன உற்ஸவம் எனப்படும் பகல் பத்து உற்ஸவம் நடக்கிறது.
பரமக்குடியில் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவராக ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி எழுந்தருளி உள்ளார். பெருமாள் வடக்கு நோக்கி உள்ளார்.
இதன்காரணமாக இங்கு ஆண்டு முழுவதும் பரமபத வாசல் வழியாகவே பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இங்கு ஆண்டாள், 12 ஆழ்வார்களின் சன்னதி உள்ளது.
இக்கோயிலில் மதுரை அழகர் கோயிலை போல் ஆண்டுதோறும் திருஅத்யயன உற்ஸவம் நடக்கிறது. பாஞ்சராத்ர ஆகம முறையில் உள்ள இக்கோயிலில், நாளை (டிச. 31) காலை 9:00 மணிக்கு பகல் பத்து உற்ஸவம் துவங்க உள்ளது. தினமும் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் வாசிக்கப்படும்.
ஜன.9 அன்று மாலை 5:00 மணிக்கு, மோகினி அவதாரத்துடன் நடை அடைக்கப்படும். மறுநாள் (ஜன.10) காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அவ்வழியாக பெருமாள் எழுந்தருளுவார்.