/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் பென்ஷனர்கள் மூத்த குடிமக்கள் சங்க கூட்டம்
/
ராமநாதபுரத்தில் பென்ஷனர்கள் மூத்த குடிமக்கள் சங்க கூட்டம்
ராமநாதபுரத்தில் பென்ஷனர்கள் மூத்த குடிமக்கள் சங்க கூட்டம்
ராமநாதபுரத்தில் பென்ஷனர்கள் மூத்த குடிமக்கள் சங்க கூட்டம்
ADDED : ஜூலை 19, 2025 11:36 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட அனைத்து பென்ஷனர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் நாகரத்தினம் வரவேற்றார். பொருளாளர் முருகேசன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.
அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கியதற்கும், பண்டிகை கால முன் பணம் ரூ.4000த்தை ரூ.6000 ஆக உயர்த்தி வழங்கியதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். எட்டாவது ஊதியக்குழுவானது 2026 ஜன., 1க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய திருத்தம் கிடையாது என்றும் அதன் பின் ஓய்வு பெற்றவர்களுக்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஓய்வூதிய விதிகள் சட்ட திருத்தத்தை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. கலெக்டரிடம் ஓய்வு பெற்ற அமைப்புக்கு இடம் வழங்க கோரி மனு அளிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் பேரூராட்சிகள் சங்க முன்னாள் தலைவர் செங்குட்டுவன், ஆசிரியர் கூட்டணி பொருளாளர் சவுந்திரபாண்டியன், முன்னாள் சங்க பொருளாளர் குருசாமி ஆகியோர் பேசினர்.
முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.