/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்
/
முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்
முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்
முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : டிச 27, 2025 05:25 AM
ராமநாதபுரம்: முடக்கப்பட்டுள்ள பஞ்சபடியை வழங்க வேண்டும் என ராமநாதபுரம் கோட்ட அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சங்கத்தின் கொடியேற்றி கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சங்கத் தலைவர் நாகநாராயணன் தலைமை வகித்தார். மறைந்த உறுப்பினர்கள், அதன் பிறகு நடந்த கூட்டத்தில் 8 வது ஊதியக்குழு உடனடியாக அமைக்க வேண்டும். ஜன.,2020 முதல் முடக்கப்பட்டுள்ள பஞ்சப்படியை வழங்க வேண்டும். மருத்துவப் படியை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க செயலாளர் முகமது இஸ்ஸதீன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் பற்குணன் நன்றி கூறினார்.