ADDED : நவ 14, 2025 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ராமநாதபுரம் வட்டக்கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் ஒய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம் முன்னிலை வகித்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது முடிந்த அனைவருக்கும்10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
மாவட்ட பொருளாளர் முருகேசன், துணைத்தலைவர் ஜெனிஸ்டர் பங்கேற்றனர். துணைச் செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

