ADDED : டிச 04, 2024 08:21 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக புறநகர் பணிமனை முன்பு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிக்கண்ணு துவக்கி வைத்து பேசினார். காரைக்குடி மண்டல தலைவர் விஸ்வநாதன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கருணாநிதி, நிர்வாகிகள் பாண்டியன், கிருஷ்ணன், விஜயராகவன், ராமச்சந்திரபாபு, மாநில செயற்குழு உறுப்பினர் பிச்சை, மாநில செயலாளர் மாலா ஆகியோர் பேசினர்.
காரைக்குடி மண்டல துணை பொதுச் செயலாளர் பவுல்ராஜ் நிறைவு செய்து பேசினார். கிளை செயலாளர் கண்ணபிரான் நன்றி கூறினார். முதல்வர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 அனைத்து துறைக்கும் வழங்க வேண்டும். காசில்லா மருத்துவம் காப்பீட்டு திட்டம் மூலம் வழங்க வேண்டும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 மாத டி.ஏ., வை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியர் இயற்கை மரணம் அடைந்தால் வழங்கப்படும் ரூ.50 ஆயிரத்தை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.