/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பை புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

ADDED : ஏப் 21, 2025 05:36 AM

முதுகுளத்துார்: -முதுகுளத்துார்- அருகேயுள்ள கீழக்கன்னிச்சேரி அருகே பரமக்குடி ரோட்டோரத்தில் எரிக்கப்படும் குப்பையால் ரோடு முழுவதும் புகை மூட்டத்தால் வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
கீழக்கன்னிச்சேரி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் குப்பையைரோட்டோரத்தில் குவித்து தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் ரோடு முழுவதும் புகை மூட்டமாக இருக்கிறது.
முதுகுளத்துார் - பரமக்குடி செல்லும் முக்கியமான ரோடு என்பதால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
எதிரேவரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் வலியுறுத்தினர்.