/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலத்தில் செயலற்ற 'சிசிடிவி' கேமராக்களை பராமரிக்க வலியுறுத்தல் தொடர் குற்றங்களால் மக்கள் அச்சம்

ADDED : டிச 31, 2025 05:19 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் உள்ள செயல்படாத சிசிடிவி., கேமராக்களை பராமரிப்பு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட், பரம்பை ரோடு, பெரிய கண்மாய் பாலம் விலக்கு பகுதி, தேசிய நெடுஞ்சாலை கைகாட்டி விலக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் சிசிடிவி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சிசிடிவி., கேமராக்கள் பொருத்தப்பட்ட சில தினங்கள் மட்டுமே கேமராக்கள் முறையாக செயல்பாட்டில் உள்ளனவா என கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். அதன் பின் சிசிடிவி கேமராக்களின் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ போலீசாரோ ஆய்வு செய்வதில்லை.
விபத்து, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெறும் போது மட்டும் முக்கிய சந்திப்புகளில் உள்ள சிசிடிவி., கேமராக்களை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.
அந்த நேரங்களில் முக்கிய சந்திப்புகளில் உள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ய முற்படும் போது அவைகள் செயல்பாட்டில் இல்லாது பழுதடைந்துள்ளது கண்டறியப்படுகிறது. இதனால் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எளிதாக தப்பு கின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் 160 பவுன் நகைகள், 18 லட்சம் பணம் திருட்டு. மூன்று மாதத்திற்கு முன்பு தனியார் இரும்பு கடையில் கொள்ளை. எட்டு மாதத்திற்கு முன்பு கோழியார்கோட்டை பகுதியில் வீடுகளில் தொடர் திருட்டு என பல்வேறு குற்றச் செயல்கள் நடந்துள்ளன.
போலீசாரால் குற்றவாளிகள் யாரும் அடையாளம் காணப்படாத நிலை உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சிசிடிவி., கேமராக்களின் பயன்பாடுகளை முறைப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.