/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சம்
/
ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சம்
ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சம்
ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சம்
ADDED : மே 16, 2025 03:00 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் கமுதி ரோடு அரசு பஸ் டெப்போ அருகே மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துார், துாரி அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முதுகுளத்துார் துணை மின் நிலையத்திலிருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. முதுகுளத்துார் அரசு பஸ் டெப்போ அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் வைக்கப்பட்டது.
தற்போது சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மின்கம்பம் எலும்பு கூடாய் இருப்பதால் காற்றடித்தால் அசைந்தாடும் நிலையில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பணியாளர்கள், பொதுமக்கள் வந்து செல்வதால் சேதமடைந்த மின்கம்பத்தால் அச்சப்படுகின்றனர்.
இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.