/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொதிகுளம் கிராமங்களில் காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமம்
/
பொதிகுளம் கிராமங்களில் காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமம்
பொதிகுளம் கிராமங்களில் காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமம்
பொதிகுளம் கிராமங்களில் காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமம்
ADDED : அக் 24, 2024 04:43 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா பொதிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் 15 நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் வராததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே பொதிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதிகுளம், சின்ன பொதிகுளம், யாதவர் குடியிருப்பு, அருணகிரி கொட்டகை, கூவர் கூட்டம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கால்நடை வளர்ப்பு, விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
இங்கு 15 நாட்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் வரவில்லை. இதனால் மக்கள் வேறு வழியின்றி குடிநீருக்காக டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. தினந்தோறும் டிராக்டருக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய வேலைக்கு கூட செல்ல முடியாமலும் பள்ளி, கல்லுாரி செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். டிராக்டர் வராத நேரங்களில் முதுகுளத்துார்- சாயல்குடி ரோடு தேவர்குறிச்சி விலக்கில் காவிரி குழாயில் வரும் குடிநீரை பிடிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
பொதிகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் தடையின்றி காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.