/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நிழற்குடை அகற்ற மக்கள் கோரிக்கை
/
அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நிழற்குடை அகற்ற மக்கள் கோரிக்கை
அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நிழற்குடை அகற்ற மக்கள் கோரிக்கை
அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நிழற்குடை அகற்ற மக்கள் கோரிக்கை
ADDED : நவ 16, 2025 03:37 AM

கமுதி: கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் பயணியர் நிழற்குடை சுவர் ஒரு பக்கம் இடிந்து விழுந்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் நோயாளிகள் அச்சப்படுகின்றனர்.
கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேரையூர், இலந்தைகுளம், கள்ளிகுளம், புல்வாய்க்குளம், சாமிபட்டி, செங்கோட்டைப்பட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் பலரும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணிகளும் பரிசோதனை செய்கின்றனர்.
கிராமங்களுக்கு செல்வதற்காக பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள் சுகாதார நிலையம் முன்பு உள்ள இரும்பு தகரத்தால் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையில் காத் திருந்து செல்கின்றனர்.
தற்போது நிழற்குடையில் சுவர்கள் விரிசலடைந்து ஒரு பக்கம் இடிந்து விழுந்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர்.
இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே நிழற் குடையை அகற்றிவிட்டு புதிதாக பயணியர் நிழற்குடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

