/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அண்டர் வாட்டர் வெல்டிங்: விண்ணப்பிக்க அழைப்பு
/
அண்டர் வாட்டர் வெல்டிங்: விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : நவ 16, 2025 03:37 AM
தொண்டி: தொண்டியில் திறன்மேம்பாட்டு அண்டர் வாட்டர் வெல்டிங் பயிற்சிக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் கூறியதாவது:
மீன்வளத்துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அண்டர் வாட்டர் பயிற்சி 23 நாட்கள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப் பயிற்சியின் போது தங்குமிடம், உணவு வழங்கப்படும். பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி கடலுக்கு அடியில் உலோக கட்டமைப்புகளை இணைக்கும் பயிற்சி இதுவாகும்.
இப் பயிற்சியின் மூலம் கடல் வழி தளங்கள் மற்றும் கப்பல்கள் கட்டும் பணிகளுக்கு தேவையான பயிற்சி பெறலாம். பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ் மற்றும் உதவித் தொகை வழங்கப்படும். அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளி நாடுகளிலும் வேலை வாய்ப்பு உண்டு. பயிற்சியில் சேர விரும்புவோர் மீன்வளத்துறை அலுவலகத்தை அணுகலாம் என்றார்.

