/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற சிறைக்குளம் மக்கள் கோரிக்கை
/
சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற சிறைக்குளம் மக்கள் கோரிக்கை
சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற சிறைக்குளம் மக்கள் கோரிக்கை
சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்ற சிறைக்குளம் மக்கள் கோரிக்கை
ADDED : மார் 25, 2025 05:39 AM

ராமநாதபுரம்: ஏர்வாடி அருகே சிறைக்குளம் பகுதியில் சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மீட்டுத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
கடலாடி சிறைக்குளம் ஊராட்சி அருந்ததியர் கிழக்கு குடியிருப்பு பொதுமக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சுடுகாட்டை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுத்து மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அதன் பிறகு போலீசார் அறிவுரைப்படி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். இதில் 10 தலைமுறைக்கும் மேலாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்து பிரச்னை செய்கின்றனர். இதனால் ஊரில் இறப்பவர்களை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சுடுகாட்டை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தினர்.