/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹைமாஸ் விளக்கு பழுது இருட்டால் மக்கள் அவதி
/
ஹைமாஸ் விளக்கு பழுது இருட்டால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 01, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பூவணிப்பேட்டையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது. முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாக, 6 மாதங்களாக ஹைமாஸ் விளக்கு பழுதடைந்து அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த காதர் மீரான் கூறுகையில், ஹைமாஸ் விளக்கு பழுதடைந்துள்ளதால், இரவில் பெண்களும், முதியோர்களும் வெளியே நடந்துசெல்ல சிரமப்படுகின்றனர். சீரமைக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.