/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் ரோட்டோரம் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி
/
கீழக்கரையில் ரோட்டோரம் ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி
ADDED : மார் 05, 2024 04:25 AM
கீழக்கரை, : -கீழக்கரை நகராட்சியில்சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
கீழக்கரை 1 முதல் 21 வார்டுகள் உள்ளன. 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து மன்னார் வளைகுடா கடற்கரை செல்லும் சாலை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது.
கீழக்கரை முக்குரோட்டில் இருந்து கடற்கரை வரை உள்ள 2 கி.மீ., தொலைவிற்கான சாலையைக் கடக்க 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் ஒரு பஸ் மட்டுமே செல்லும் அளவிற்கு சாலை குறுகியதாக உள்ளது. மும்முனை சந்திப்பில் எதிரே வரும் பஸ் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் நின்று காத்திருந்து அதன்பிறகு செல்கின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதிகளவு ஆக்கிரமிப்பு கடைகளால் படி வைத்து கட்டுவதால் சாலையோரத்தில் பஸ் வந்தால் ஒதுங்கி செல்ல கூட முடியவில்லை. டூவீலர் ஓட்டுவோர் படியில் தட்டி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
எனவே இரண்டு பஸ்கள் செல்லும் வகையில் முன்பு இருந்ததைப் போல சாலை அகலப்படுத்த வேண்டும்.ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய வருவாய் துறையினர், கீழக்கரை போலீசார், நகராட்சி நிர்வாகத்தினர் மவுனம் சாதிக்கின்றனர். இதனால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாகவே அமைகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.

