/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நீர்த்தேக்க தொட்டி இடிப்பு குடிநீர் வராமல் மக்கள் அவதி
/
நீர்த்தேக்க தொட்டி இடிப்பு குடிநீர் வராமல் மக்கள் அவதி
நீர்த்தேக்க தொட்டி இடிப்பு குடிநீர் வராமல் மக்கள் அவதி
நீர்த்தேக்க தொட்டி இடிப்பு குடிநீர் வராமல் மக்கள் அவதி
ADDED : ஜூலை 07, 2025 02:24 AM

கீழக்கரை, :  -கீழக்கரை நகராட்சியில் சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்கம் அகற்றப்பட்டதால், அப்பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வராமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கீழக்கரை வடக்கு தெருவில் கொந்த கருணை அப்பா தர்கா வளாகத்தில் நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான 4 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட பெரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் இருந்தது.
கடந்த வாரம் துவங்கி மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடித்து அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது. இதன்காரணமாக காவிரி நீர் 10 தினங்களாக அப்பகுதியில் வினியோகம் செய்யப்படவில்லை.
கீழக்கரை நகராட்சி துணை சேர்மன் ஹமீது சுல்தான் கூறியதாவது:
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டு அவ்விடத்தில் புதிதாக 10 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணி நடக்க உள்ளது.
தற்போது குடிநீர் செல்லும் பாதையில் உள்ள குழாய்கள் சேதமடைந்து இருப்பதால் குடிநீர் வழங்க இயலவில்லை.
பழுது நீக்கம் செய்யப்பட்டு 3 நாட்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.

