/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழைய கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி
/
பழைய கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி
பழைய கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி
பழைய கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி
ADDED : நவ 14, 2025 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், ஆதார் சேவை மையம் செயல்படுகின்றன. மக்கள் குறைதீர் கூட்டம் அருகில் உள்ள கட்டடத்தில் வாரந்தோறும் நடக்கிறது. இதனால் தினமும் அப்பகுதிக்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.
தரைதளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ., இயந்திரம் பழுதடைந்துள்ளது. அலுவலகத்திற்கு வரும் மக்களும் குடிநீர் இல்லாததால் சிரமப்படுகின்றனர். அரசு அலுவலகங்களில் குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.