/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செய்தி வெளியான இரண்டே நாளில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி

ADDED : ஜன 24, 2025 04:25 AM

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழில் செய்தி வெளியான ௨ நாளில் முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.
முதுகுளத்துார் அருகே காத்தாகுளம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். ரேஷன் கடை வசதி இல்லாததால் ரேஷன் கார்டுதாரர்கள் 5 கி.மீ., முதுகுளத்துார் சென்று அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்து அக்.10ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செய்தி வெளியான அன்றே அதிகாரிகள் ஆய்வு செய்து பகுதி நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிராமத்தில் உள்ள கட்டடத்தில் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்படாமல் உள்ளதால் இறக்கி வைக்கப்பட்ட பொருட்களை அணில் உட்பட பறவைகளுக்கு இரையாகி வருகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக செயலாட்சியர் திருலோக சந்தர், வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, செயலாளர் முத்து செல்லபாண்டியன் முன்னிலையில் பகுதி நேர ரேஷன் கடை திறந்து பொருட்கள் வழங்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர் பூபதிமணி, கிளைச் செயலாளர் மருதுபாண்டி, உதவியாளர் ரஞ்சித், மணிகண்டன் உட்பட கூட்டுறவு பணியாளர்கள் பங்கேற்றனர். செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.