/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் பாதிப்பு :கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுதித்தர அதிக வசூல்
/
மக்கள் பாதிப்பு :கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுதித்தர அதிக வசூல்
மக்கள் பாதிப்பு :கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுதித்தர அதிக வசூல்
மக்கள் பாதிப்பு :கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுதித்தர அதிக வசூல்
ADDED : அக் 14, 2025 03:45 AM

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இதனால் தங்கள் மனுவின் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாரந்தோறும் பல்வேறு குறைகள், கோரிக்கைகள் அடங்கி மனுக்களை தனியாகவும், கிராம மக்கள் ஒன்றாக இணைந்து மனு அளிக்கின்றனர்.
இவர்களுக்கு உதவி செய்வதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதி தரும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
நல்ல வருமானம் கிடைப்பதால் மனு எழுதி தரும் நபர்களின் எண்ணிக்கை வாரந்தோறும் அதிகரித்துள்ளது. மனு எழுதி தருபவர்கள் இடையே போட்டா போட்டி ஏற்படுகிறது. மனு எழுத பேப்பர் வாங்கி கொடுத்து ஒரு மனுவிற்கு ரூ.50 முதல் ரூ.100 வரை பணம் வசூலிப்பதால் ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ஒரு மனுவிற்கு குறைந்த பட்சம் ரூ.20 வாங்கலாம். மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்பவர்கள் மீது கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக சேவை மனப்பான்மையுள்ள தன்னார்வலர்கள், கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்களை திங்கள் குறை தீர்க்கும் நாளன்று மட்டும் மனு எழுதித்தர நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என என மக்கள் வலியுறுத்தினர்.