/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவமனை சித்தா பிரிவில் நிரந்தரமாக டாக்டர் தேவை
/
மருத்துவமனை சித்தா பிரிவில் நிரந்தரமாக டாக்டர் தேவை
மருத்துவமனை சித்தா பிரிவில் நிரந்தரமாக டாக்டர் தேவை
மருத்துவமனை சித்தா பிரிவில் நிரந்தரமாக டாக்டர் தேவை
ADDED : டிச 31, 2025 05:18 AM
திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவுக்கு நிரந்தர டாக்டர் நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாடானை அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவு உள்ளது. இங்கு மூட்டு வலி, தோல் நோய்களுக்கான மருந்து, சர்க்கரை பாதிப்பு, நாள்பட்ட ஆறாத காயம் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு நிரந்தர டாக்டர் இல்லாததால் பாண்டுகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சித்தா பிரிவு டாக்டர் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றுகிறார்.
திருவாடானை மக்கள் கூறுகையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது, நிலவேம்பு கஷாயம் வழங்குவது போன்ற குறிப்பிடத்தக்க பணி சித்த மருத்துவத்தில் உள்ளது. தொடர்ந்து பல்வேறு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. நிரந்தர டாக்டர் இல்லாததால் பாதிப்பு உள்ளது. எனவே திருவாடானை சித்தா பிரிவுக்கு நிரந்தர சித்த மருத்துவர் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

