/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை விடுவித்த 12 படகுகளை மீட்க விரைவில் அனுமதி தேவை
/
இலங்கை விடுவித்த 12 படகுகளை மீட்க விரைவில் அனுமதி தேவை
இலங்கை விடுவித்த 12 படகுகளை மீட்க விரைவில் அனுமதி தேவை
இலங்கை விடுவித்த 12 படகுகளை மீட்க விரைவில் அனுமதி தேவை
ADDED : ஆக 27, 2025 03:19 AM
ராமேஸ்வரம்:இலங்கை கடற்கரையில் உள்ள 12 படகுகளை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினரால் 2020 முதல் 2023 வரை சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் 12 விசைப்படகுகளை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுவித்தது. இப்படகுகளை மீட்பது குறித்து ஆய்வு செய்ய நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 14 மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு சென்றனர். இதனருகே உள்ள மயிலட்டிதுறை கடற்கரையில் உள்ள 12 படகுகளை மீனவர்கள் ஆய்வு செய்தனர். நேற்று அவர்கள் திரும்பினர்.
மீனவர் சங்க தலைவர் சேசுராஜா கூறியதாவது: அங்கு 100க்கும் மேலான படகுகள் தாறுமாறாக கிடக்கின்றன. விடுவித்த 12 படகுகளை மீட்க மற்ற படகுகளை அங்கிருந்து இலங்கை கடற்படையினர் அகற்ற வேண்டும். சில படகுகள் 60 சதவீதம் நல்ல நிலையில் உள்ளன. மழை சீசன் துவங்குவதற்கு முன் அதாவது செப்., இறுதிக்குள் மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெற்றுத் தரவேண்டும் என்றார்.