/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரிடியம் மோசடி வழக்கில் இருவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
/
இரிடியம் மோசடி வழக்கில் இருவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
இரிடியம் மோசடி வழக்கில் இருவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
இரிடியம் மோசடி வழக்கில் இருவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
ADDED : நவ 11, 2025 11:50 PM

ராமநாதபுரம்: இரிடியம் மோசடி வழக்கில் கைதான இருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகம் முழுவதும் இரிடியத்தில் ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ.ஒரு கோடி தரப்படும் எனக் கூறி பலர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தியதால் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழக சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி பல்வேறு மாவட்டங்களில் சி.பி. சி.ஐ.டி., போலீசார் 30க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் வைகை நகரை சேர்ந்த முன்னாள் தாசில்தார் ஜெயக்குமார் 67, அளித்த புகாரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.பல கோடி மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே கரூர், வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்த சிற்றரசு ராயன் 64, மதுரை மெய்யனுாத்தப்பட்டி அன்னக்கொடி 62, ஆகியோரை சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
சிற்றரசு ராயன் சேலம் சிறையிலும், அன்னக்கொடி மதுரை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இருவரும் விசாரணைக்காக நேற்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் ராமநாதபுரத்தில் பலரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கருதியதால் சி.பி.சி.ஐ.டி., போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு மனு தாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த நீதித்துறை நடுவர் நிலவேஸ்வரன், இருவரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
மீண்டும் நவ.,13 மாலை 5:00 மணிக்கு 2 பேரை ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

