/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டில்லி கார் குண்டு வெடிப்பு எதிரொலி: ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு தீவிரம்

ADDED : நவ 11, 2025 11:50 PM

ராமேஸ்வரம்: டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு எதிரொலியாக ராமேஸ்வரம் கோயில், கடலில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த கார் குண்டு வெடிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நுழைவு வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்களை கோயிலுக்குள் செல்லஅனுமதித்தனர்.
ராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் மற்றும் உடைமைகளை சோதனை யிட்டனர்.
பாம்பன் ரயில், சாலை பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
கடலில் ரோந்து: மண்டபம் மரைன் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி, போலீசார் படகில் மன்னார் வளைகுடா கடலில் ரோந்து சுற்றினர். மீன்பிடித்து கொண்டிருந்த நாட்டுப்படகை சோதனையிட்டு மீனவர்களின் அடையாள அட்டையை ஆய்வு செய்தனர். சந்தேகிக்கும் படி படகுகள் ஊடுருவினால் தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.