/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : நவ 11, 2025 11:33 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி தலைமையில் மாணவர்களின் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் கருணாகரன் வரவேற்று பேசி, போதைப் பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து விளக்கினார்.
சிறப்பு விருந்தினர் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ கலந்து கொண்டு, போதை பொருள் பயன்பாட்டால் பொதுமக்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

