ADDED : நவ 11, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் வரவணி, செங்குடி, பாரனுார், புல்லமடை உள்ளிட்ட ஊராட்சிகளில் பிரதான் தொண்டு நிறுவனம் சார்பில் 10 வகையான மரக்கன்றுகள் நடுதல் மற்றும் குறுங்காடுகள் அமைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
அப்பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) லிங்கம் தலைமை வகித்து மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.
ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பாண்டிசெல்வன், தொண்டு நிறுவன திட்ட அலுவலர்கள் மாயகிருஷ்ணன், கோகுல கண்ணன் ஆகியோர் மரக்கன்று நடுதலின் அவசியம் குறித்தும், மரக்கன்றுகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கினர்.

