/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உடலை பொது மயானத்தில் புதைக்க அனுமதி கோரி மனு
/
உடலை பொது மயானத்தில் புதைக்க அனுமதி கோரி மனு
ADDED : நவ 26, 2024 05:05 AM

ராமநாதபுரம்: திருவாடானை தாலுகா முகிழ்தகம் கிராமத்தில் உள்ள பொது மயானத்தில் இறந்தவர் உடலை புதைக்க அனுமதிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
முகிழ்தகம் சர்ச் குடியிருப்பு சந்தியாகு, அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் ஊரில் இறந்தவர்களின் உடலை புதைக்க பொது மயானம் உள்ளது.
இதனை பூட்டி ஊராட்சியை சேர்ந்த தனிநபர் சாவியை வைத்துள்ளார். சமீபத்தில் வரிபாக்கி உள்ளதாகக் கூறி இறந்தவர் உடலை புதைக்க கேட்டை திறந்து விடவில்லை.
இதனால் அவரது விவசாய நிலத்தில் உடல் புதைக்கப்பட்டது.
இது தொடர்பாக வி.ஏ.ஓ.,விடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை. எனவே மயானக்கரை சாவியை தனி நபரிடமிருந்து வாங்கி அரசு அலுவலரான தலையாரியிடம் கொடுக்க வேண்டும். இனிமேல் இறப்பவர்களின் உடலை மயானத்தில் புதைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.