/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஈரானில் சிக்கியுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு

ADDED : ஜூன் 21, 2025 09:09 PM

ராமேஸ்வரம்:ஈரானில் மீன்பிடித் தொழிலாளியாக சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை மீட்க பெற்றோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் சூசையப்பர்பட்டினத்தை சேர்ந்த சூசைராஜ் மகன்கள் பிரதீப் 26, ஆஸ்கார் 24, மற்றும் எல்ரோலின் 23.   ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இலங்கை கடற்படை கெடுபிடியால் ஓராண்டுக்கு முன் விசா மூலம் மூவரும் ஈரானுக்கு மீன்பிடி தொழிலாளியாக சென்றனர்.
தற்போது  இஸ்ரேல் ---  ஈரான் இடையே போர் மூண்டுள்ளதால் அங்குள்ள அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இதனால் பதட்டமடைந்த மீனவர்களின் பெற்றோர் கடந்த 3 நாட்களுக்கு முன்  மகன்களுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஆனால் ' சுவிட்ச் ஆப் 'ஆகி இருந்ததால், உறவினர்கள் பதட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தங்கச்சிமடம் வந்த கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோனிடம், மீனவர்களின் உறவினர்கள் மனு கொடுத்து ஈரானில் சிக்கிய 3 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.