ADDED : அக் 19, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே மங்களக்குடியை சேர்ந்தவர் கற்பகவள்ளி 45. நேற்று முன்தினம் இரவு கதவை திறந்து வைத்துவிட்டு துாங்கி கொண்டிருந்தார்.
அப்போது எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த அசாருதீன் 25, வீட்டில் நுழைந்து அலைபேசியை திருடினார். சத்தம் கேட்டு துாக்கத்திலிருந்து எழுந்த கற்பகவள்ளி சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் அசாருதீனை பிடித்து திருவாடானை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

