/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் பன்றிகளால் மக்களுக்கு சுகாதாரக்கேடு: தொற்று நோய் அபாயம்

ADDED : நவ 25, 2025 05:20 AM

பரமக்குடி: பரமக்குடி கால்வாய் மற்றும் வைகை ஆற்றுப் பகுதிகளில் நடமாடும் பன்றிகளால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.
பரமக்குடி நகராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தெருக்களில் ஏராளமான பன்றிகள் திரிகின்றன. அப்போது பன்றிகளால் தொற்று நோய் அபாயம் உள்ளது. சில மாதங்களாக வைகை ஆறு படித்துறைகள் உட்பட கால்வாய் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் திரிகின்றன. இவை அப்பகுதியில் கழிவு நீரில் நீந்துகின்றன.
பன்றிகள், கழிவு நீரால் நிலத்தடி நீர் மற்றும் காற்றை மாசுபடுத்தி சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. உரிமம் பெற்று பன்றிகளை வளர்ப்போர் அவற்றை குறிப்பிட்ட இடங்களில் அடைத்து வளர்க்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆனால் சில மாதங்களாக பன்றிகளை கூட்டம் கூட்டமாக வெளியில் உணவிற்காக திறந்து விடுவது அதிகரித்துள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பன்றிகளை முறைப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.