/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அம்மா பூங்கா அருகே திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
/
அம்மா பூங்கா அருகே திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
அம்மா பூங்கா அருகே திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
அம்மா பூங்கா அருகே திரியும் பன்றிகளால் சுகாதாரக்கேடு
ADDED : மே 30, 2025 11:39 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் 'டி' பிளாக் அம்மா பூங்கா அருகே குப்பை கொட்டப்பட்டு அதில் பன்றிகள் திரிவதால் துர்நாற்றத்தால் நடைப்பயிற்சியாளர்கள், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சியில் டி பிளாக் பகுதியில் அம்மா பூங்கா 6 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு பல லட்சம் செலவில் குழந்தைகள் விளையாடும் வகையில் ராட்டினம், ஊஞ்சல்கள், விலங்குகளின் பொம்மைகள் உள்ளன. இதுபோக தனியாக உடற்பயிற்சிகூடம் உள்ளது.
தற்போது காலை, மாலை நடை பயிற்சி மேற்கொள்வதற்காக தினமும் ஏராளமானவர்கள் வருகின்றனர். இங்கு இரவில் பெயரளவில் விளக்குகள் எரிகின்றன. பூங்காவின் பின்புறத்தில் டி-பிளாக் குடியிருப்பு பகுதியில் குப்பையை கொட்டி தரம் பிரிக்கின்றனர்.
பன்றிகள் ஏராளமாக சுற்றத்திரிவாதல் துர்நாற்றத்தினால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அம்மா பூங்கா அருகே குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும். பன்றிகளை வேறு இடத்தில் வளர்க்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.