/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோடு சீரமைப்பில் குழாய் உடைப்பு
/
ரோடு சீரமைப்பில் குழாய் உடைப்பு
ADDED : நவ 07, 2025 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை- திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் ரோட்டோரங்களில் உள்ள செடிகளை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. அப்போது திருவெற்றியூர் சர்ச் அருகே குடிநீர் குழாய் உடைக்கப்பட்டது. ஒரு மாதமாகியும் சரி செய்யாததால் புதுப்பையூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு 3 இடங்களில் குழாய்கள் உடைக்கப்பட்டன. இதுவரை சரி செய்யாததால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

