/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நகராட்சி ஆற்றுப்பாலத்தில் குழாய் சேதம்: வீணான காவிரி நீர்
/
பரமக்குடி நகராட்சி ஆற்றுப்பாலத்தில் குழாய் சேதம்: வீணான காவிரி நீர்
பரமக்குடி நகராட்சி ஆற்றுப்பாலத்தில் குழாய் சேதம்: வீணான காவிரி நீர்
பரமக்குடி நகராட்சி ஆற்றுப்பாலத்தில் குழாய் சேதம்: வீணான காவிரி நீர்
ADDED : ஜன 14, 2025 05:10 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி உட்பட மாவட்டம் முழுவதும் மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
அதேசமயம் நகராட்சிகளில் உள்ள உள்ளூர் குடிநீர் திட்டத்தை சீர் செய்யாமல் விட்டுள்ளனர். இக்குழாய்களில் பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான உடைப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை சீர் செய்ய ஆங்காங்கே துறை சார்பில் கான்ட்ராக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆற்றுப் பாலம் பகுதியில் சிறிய அளவிலான குழாயில் உடைப்பு ஏற்பட்டு சீர் செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரமாக வால்வு அருகில் கசிவு ஏற்பட்டு ஆற்றுப் பாலம் கீழ்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று போக்குவரத்து பாதித்தது.
இந்த கசிவு பெரிதாகி நேற்று குழாய் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது.
இதனால் ஒட்டுமொத்தமாக வைகை ஆறு சர்வீஸ் ரோடு பயன்படுத்த முடியாதபடி தண்ணீர் தேங்கியது.
குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலையில் இது போன்று வீணாவது பொதுமக்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. எனவே காவிரி குடிநீர் உள்ளிட்ட குழாய் உடைப்புகளை அவ்வப்போது சீரமைக்க குடிநீர் வடிகால் வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நகராட்சி தலைவர் சேதுகருணாநிதி கூறுகையில், உடைந்த குழாயை சீரமைக்கும் பணி நடக்கிறது. தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.