/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி
/
ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி
ADDED : டிச 08, 2024 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : தொண்டி பேரூராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தில்தெருக்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது.
ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினமும் தட்டுப்பாடின்றி வினியோகிக்க வேண்டும் என்பதற்காக அரசு ஜல்ஜீவன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான பகிர்மான குழாய் பதிப்பது, மேல்நிலை தொட்டிகள் கட்டுவது, குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது போன்ற பணிகள்மேற்கொள்ளப்படுகிறது. தொண்டியில் இப்பணிகள் நடக்கிறது. தெருக்களில் குழாய் பதிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.