ADDED : மே 16, 2025 03:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை தாலுகா அலுவலகம் அருகில் வட்டாரக் கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வாசலில் செடிகள் அடர்ந்து புதர்களாக மாறியுள்ளது. செடிகள் 10 அடி உயரம் வளர்ந்து அலுவலகத்தை மறைக்கின்றன.
அடர்ந்த புதராக இருப்பதால் விஷ பூச்சிகளின் கூடராரமாகி சுகாதாரம் இல்லாத இடமாகவும் மாறியுள்ளது. மழை காலத்தில் பூச்சிகள் அலுவலகத்திற்கு நுழைவதால் அலுவலர்கள் அச்சமடைந்துள்ளனர். ஆகவே செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.