/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் மக்களை பயமுறுத்தும் பிளக்ஸ்கள்
/
பரமக்குடியில் மக்களை பயமுறுத்தும் பிளக்ஸ்கள்
ADDED : அக் 30, 2025 03:45 AM

அதிகாரிகள் கவனம் தேவை
பரமக்குடி:  பரமக்குடி பகுதிகளில் பண்டிகை காலங்களில் வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்படாமல் உள்ளதால் ஆபத்தான நிலை உள்ளது.
தீபாவளி பண்டிகை உட்பட வீட்டு விசேஷங்களுக்கு பரமக்குடி பகுதியில் ஏராளமான பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. இது போன்ற போர்டுகள் மக்கள் அதிகம் நடமாடும் தரைப்பாலம், ஐந்து முனை, ஓட்டப் பாலம், பஸ் ஸ்டாண்ட் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் வரிசை கட்டி வைக்கப்பட்டது.
இவ்வாறு வைக்கப்பட்ட போர்டுகள் முறைப்படி கட்டி வைக்கப்படாமல் காற்றின் வேகத்தால் ஆங்காங்கே கிழிந்த நிலையில் சாய்ந்து வருகிறது. மேலும் பல போர்டுகள் நெடுஞ்சாலைகளில் வழிகாட்டி போர்டுகளை மறைத்து வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப் படுகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி போன்ற பண்டிகை முடிவடைந்த சூழலிலும், ஆங்காங்கே பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்படாமல் நிற்கிறது. அவ்வப்போது பெய்து வரும் மழை மற்றும் காற்றின் வேகத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை பயமுறுத்துகின்றன.
ஆகவே விபத்துக்கு முன் துறை அதிகாரிகள் பிளக்ஸ் போர்டுகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

