தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஆற்றோர வாறுகாலில் பிளாஸ்டிக் போர்வை; கொசு உற்பத்தி ஜோர்

ஆற்றோர வாறுகாலில் பிளாஸ்டிக் போர்வை; கொசு உற்பத்தி ஜோர்

ஆற்றோர வாறுகாலில் பிளாஸ்டிக் போர்வை; கொசு உற்பத்தி ஜோர்


ADDED : பிப் 20, 2024 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றங்கரையோர வாறுகால்களில் பிளாஸ்டிக் குப்பை போர்வையாக படிந்துள்ள நிலையில் கொசுக்கள் உற்பத்தி ஜோராக உள்ளதால் மக்கள் அலறுகின்றனர்.

பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வாறுகால்களில் வெளியேற்றப்படுகிறது. இவை ஒட்டு மொத்தமாக பிரதான கால்வாய்கள், ரயில்வே டிராக் ஓரம் மற்றும் வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள வாறுகால்களில் ஓடையாக செல்கிறது.

பரமக்குடி, எமனேஸ்வரம் தரைப்பாலம் அருகில் துவங்கி நகராட்சி எல்லையான சுந்தர் நகர் வரை 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வாறுகால் கட்டப்பட்டது. மேலும் காட்டுப் பரமக்குடி எல்லை துவங்கி 2 கி.மீ., வரை வைகை ஆற்றின் கரையில் மணல் வெளியில் கழிவு நீர் செல்கிறது.

நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வாறுகால்களை சுத்தள் செய்வது இல்லை என பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது சில மாதங்களாக ஆற்றங்கரையோர வாறுகால்கள் உட்பட அனைத்து கழிவு நீர் ஓடைகளும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.

கட்டுக்கடங்காத பிளாஸ்டிக் விற்பனையால் பயன்படுத்தப்பட்ட அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் வாறுகாலில் போர்வையாக படிந்து அடர்ந்து காணப்படுகிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்த நகரும் கொசுத் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி சுகாதாரத்துறையினர் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தி வாறுகால்களை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us