/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பி.எம்.எஸ்., சார்பில் தேசிய கைத்தறி தினம் கூலியை சமன்படுத்த கோரிக்கை

ADDED : ஆக 09, 2025 03:21 AM
பரமக்குடி: பரமக்குடியில் தேசிய கைத்தறி தினம் பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.,) சார்பில் கொண்டாடப்பட்டது.
பரமக்குடியில் பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழில் செய்யும் மக்கள் அதிகளவு உள்ளனர். ஆக.,7 தேசிய கைத்தறி தினத்தில் நெசவாளர்கள் கவுரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
கைத்தறி பிரிவு மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். செயலாளர் காசி விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். பொது தொழிலாளர் சங்க செயலாளர் மோகன்ராம் வரவேற்றார்.
நிர்வாகிகள் உட்பட நெசவாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலியை உயர்த்தி சமன்படுத்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பெண்கள் நலனில் உறுதியளிக்கும் சுய சார்புள்ள கைத்தறி நெசவுத் தொழிலையும், நெசவாளர்களையும் காப்போம் என கோஷம் எழுப்பினர்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகையில் நெசவாளர்களை காக்க கைத்தறி துணிகளை வாங்க வேண்டும் என வலியுறுத்தினர். துணைச்செயலாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.