/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளியில் கழிப்பறை வசதியின்றி போகலுார் மாணவர்கள் அவதி
/
பள்ளியில் கழிப்பறை வசதியின்றி போகலுார் மாணவர்கள் அவதி
பள்ளியில் கழிப்பறை வசதியின்றி போகலுார் மாணவர்கள் அவதி
பள்ளியில் கழிப்பறை வசதியின்றி போகலுார் மாணவர்கள் அவதி
ADDED : மார் 18, 2025 06:56 AM

ராமநாதபுரம்: போகலுாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிப்பறை கட்டி திறக்கப்படாமல் உள்ளதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
போகலுார் கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 2022ல் புதிதாக கழிப்பறை கட்டடம் கட்டுப்பட்டு இதுவரை குழாய் இணைப்பு வழங்கப்படாமல் பூட்டிக்கிடக்கிறது.
கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் அருகேயுள்ள ஊருணிக்கு சென்று வருவதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே கட்டி 2 ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் உள்ள கழிப்பறைக்கு குழாய் இணைப்பு வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.