/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏ.எஸ்.பி., தலைமையில் போலீசார் துாய்மைப் பணி
/
ஏ.எஸ்.பி., தலைமையில் போலீசார் துாய்மைப் பணி
ADDED : மார் 16, 2025 12:26 AM

ஆர்.எஸ்.மங்கலம்; சுத்தமான ஆர்.எஸ். மங்கலம் என்ற கோஷத்துடன் ஏ.எஸ்.பி. பயிற்சி தனுஷ்குமார் தலைமையில் போலீசார் துாய்மைப் பணியில் ஈடுபட்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
ஆர்.எஸ்.மங்கலத்தில் பயிற்சி ஏ.எஸ்.பி.,யாக தனுஷ் குமார் கடந்த மாதம் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து செயலாற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஏ.எஸ்.பி., பயிற்சி தனுஷ்குமார் தலைமையில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசார், பேரூராட்சி பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து குப்பை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேசிய நெடுஞ்சாலை கைகாட்டி விலக்கில் இருந்து, டி.டி.மெயின்
ரோடு, பரமக்குடி ரோடு, பஸ்ஸ்டாண்ட் வளாகம், வாரச்சந்தை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களுடன் இணைந்து காவலர்கள் குப்பையை சேகரித்து அகற்றினர்.
மேலும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் குப்பையை முறையாக சேகரித்து பேரூராட்சி ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆர்.எஸ். மங்கலத்தில் போலீசார் குப்பையை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்கள், போலீசாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆர். எஸ்.மங்கலம் தாசில்தார் வரதராஜன், பேரூராட்சி தலைவர் மவுசூரியா, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களும், தன்னார்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.