/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை மீனவர்களை உபசரித்து விமானத்தில் அனுப்பிய போலீசார்
/
இலங்கை மீனவர்களை உபசரித்து விமானத்தில் அனுப்பிய போலீசார்
இலங்கை மீனவர்களை உபசரித்து விமானத்தில் அனுப்பிய போலீசார்
இலங்கை மீனவர்களை உபசரித்து விமானத்தில் அனுப்பிய போலீசார்
ADDED : ஏப் 07, 2025 01:30 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மார்ச் 20ல் பாசிபட்டினம் கடற்கரையில் இருந்து இரு நாட்டிக்கல் துாரத்தில் நின்ற மர்ம படகை மரைன் போலீசார் மீட்டனர். அந்த படகில், இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த பூலோகநாதன், 54, விமலேந்திரன், 45, இருந்தனர்.
இவர்கள் மார்ச் 13ல் இலங்கையில் இருந்து மீன்பிடிக்க வந்தபோது, படகு திசை மாறி, தொண்டி பாசிபட்டினம் நோக்கி சென்ற நிலையில், படகு பழுதாகி எரிபொருள் தீர்ந்தது.
எல்லை தாண்டி வந்த இருவரையும், தொண்டி மரைன் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இலங்கையில், 11 மீனவர்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 4ல் விடுதலை செய்யப்பட்டனர்.
தொண்டி போலீசாரால் நேற்று முன்தினம் இரவு புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர்களுக்கு, உணவு, உடைகள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய பொருட்களை கொடுத்தனர். பின், இலங்கை புறப்பட்ட விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர், மனிதாபினம் இல்லாமல் அவர்களை தாக்குவது வழக்கம். சிறையில் பல்வேறு இன்னல்களுக்கு பின் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்களை தமிழக போலீசார் மனித நேயத்தோடு உபசரித்து அனுப்பினர்.

