ADDED : மே 18, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: விருதுநகர் மாவட்டம் அத்திபட்டி ஜெயராம் நகர் முல்லை வீதியை சேர்ந்தவர் ராமசாமி 54. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் ராமநாதபுரம் வழுதுார் துணை மின் நிலையத்தில் 2018 ல் இருந்து காவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன் தினம் இரவு 9:30 மணிக்கு பணிக்கு வந்தவர் பணியில் இருந்த போது இறந்தார்.
நேற்று காலை பணிக்கு வந்த உதவி பொறியாளர் இந்துமதி பார்த்துள்ளார்.
உதவி பொறியாளர்கள் கண்ணன், ஜெகதீஷ் ஆகியோரிடம் தெரிவித்தார்.
புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.