/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதி அருகே புத்தாண்டில் பொன் ஏர் பூட்டும் விழா
/
கமுதி அருகே புத்தாண்டில் பொன் ஏர் பூட்டும் விழா
ADDED : ஏப் 15, 2025 05:45 AM

கமுதி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் பொன் ஏர் பூட்டும் விழா நடந்தது.
தமிழ் புத்தாண்டு தினத்தில் விவசாயத்தை துவக்கினால் ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்ற ஐதீகம் உள்ளது. பல்வேறு கிராமத்தில் பொன்விளைகிற பூமி என்று விளைநிலத்தை மதித்து விவசாயிகள் முதல் உழவு செய்யும்போது, மண்ணில் தங்க காசு அல்லது ஆபரணம் வைத்து ஏர் பூட்டுவது பொன் ஏர் என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் கமுதி அருகே தலைவ நாயக்கன்பட்டி கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி பொன் ஏர் பூட்டும் விழா நடந்தது.
அப்போது விவசாயி முத்துராமு கூறியதாவது, பொன் ஏர் விழாவில் கிராமத்தின் முக்கிய வீதிகளில் அலங்கரிக்கப்ட்ட டிராக்டர் மூலம் ஊர்வலமாக வந்து தார் குச்சி, டிராக்டர்களை வணங்கிவிட்டு ஏர்பூட்டி உழவு பணியை தொடங்கினார். விதை நெல் துாவினர் என்றார்.
* திருவாடானை: தாலுகாவில் சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நம்புதாளை உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை, நல்ல மகசூல் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி, விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் விதைத்து வணங்கினர்.