/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் வந்திருந்த வடமாநில பக்தர்கள் பொங்கல் கொண்டாட்டம்
/
ராமேஸ்வரம் வந்திருந்த வடமாநில பக்தர்கள் பொங்கல் கொண்டாட்டம்
ராமேஸ்வரம் வந்திருந்த வடமாநில பக்தர்கள் பொங்கல் கொண்டாட்டம்
ராமேஸ்வரம் வந்திருந்த வடமாநில பக்தர்கள் பொங்கல் கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : -ராமேஸ்வரத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற வட மாநில பக்தர்கள் பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
ராமேஸ்வரத்தில் தனியார் மகாலில் வட மாநில ஆன்மிக பக்தர் குழு நடத்தும் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சி ஜன.5 முதல் ஜன.15 வரை நடக்கிறது.
இதில் குஜராத், உ.பி., ம.பி., ராஜஸ்தானை சேர்ந்த 1000 பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
பொங்கல் விழாவையொட்டி நேற்று ராமேஸ்வரத்தில் வட மாநில பக்தர்கள் பொங்கல் சமைத்து விழாவாகக் கொண்டாடினர்.
மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.