/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முனீஸ்வரர் கோயிலில் பூக்குழி விழா துவக்கம்
/
முனீஸ்வரர் கோயிலில் பூக்குழி விழா துவக்கம்
ADDED : ஜூன் 01, 2025 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கோட்டை முனீஸ்வரர், கருப்பண்ண சுவாமி கோயில், காளியம்மன் கோயில் 47 ஆம் ஆண்டு பூக்குழி விழா, காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
காப்பு கட்டுதல் விழாவை முன்னிட்டு, மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தினமும் மாலையில், மூலவர்களுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, முக்கிய விழாவான பூக்குழி விழா, ஜூன் 6ல் நடக்கிறது. அன்று விரதம் இருந்த பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.