/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
/
ராமநாதபுரத்தில் அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 29, 2025 11:07 PM
ராமநாதபுரம்; அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நாகநாராயணன் தலைமைவகித்தார். செயலாளர் முகமது இஸ்சதீன் வரவேற்றார்.
இதில் 8 வதுஊதியக்குழுவை உடனே அமைத்து புதிய பென்ஷன் கிடைக்க வேண்டும். முடக்கப்பட்ட பஞ்சப்படி வழங்க வேண்டும்.
நிறுத்திவைக்கப்பட்டுள்ள சீனியர் சிட்டிசன் ரயில்வே டிக்கெட் தட்கல் மீண்டும் கிடைக்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
பி.எஸ்.என்.எல்., பென்ஷனர் சங்கத் தலைவர் அமலநாதன் உட்படபலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர பற்குணன் நன்றி கூறினார்.