/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிச.16ல் தபால்சேவை குறை தீர் முகாம்
/
டிச.16ல் தபால்சேவை குறை தீர் முகாம்
ADDED : டிச 07, 2024 05:40 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை வளாகத்தில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிச.16ல் மதியம் 12:00 மணிக்கு தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
தபால் சேவை குறைகளை டிச.10க்குள் தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், அரண்மனை தெற்கு தெரு, ராமநாதபுரம்-623 501 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். புகாரில் தபால் அனுப்பிய தேதி, நேரம், அனுப்பியவர், பெறுபவரின் முகவரி, ரசீது எண் விபரங்களை குறிப்பிட வேண்டும்.
சேமிப்பு வங்கி, காப்பீடு புகாராக இருந்தால் கணக்கு எண், பாலிசிதாரரின் பெயர், முழு முகவரி, பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர் விபரங்கள் இருக்க வேண்டும். ஏற்கனவே புகார் அளித்து திருப்தி அடையாதவர்கள் மீண்டும் புகார் மனு அனுப்ப தேவையில்லை.
குறைகளை மட்டும் அனுப்பலாம். தனியார் கூரியரில் வரும் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.