/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகலை தமிழாசிரியர் அவையம் ஆண்டு விழா
/
முதுகலை தமிழாசிரியர் அவையம் ஆண்டு விழா
ADDED : ஆக 19, 2025 01:22 AM
பரமக்குடி : பரமக்குடியில் முதுகலை தமிழாசிரியர் அவையம் சார்பில், ஆண்டுவிழா, பேராசிரியர்களுக்கு விருது, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கர்ணன் தலைமை விகித்தார். தமிழாசிரியர் ஜெகதீஸ்வரி வரவேற்றார்.
பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், மானாமதுரை அரசு கல்லுாரி முதல்வர் கோவிந்தன், ஆயிர வைசிய சபை தலைவர் பாலுசாமி, பள்ளி தாளாளர் சதீஷ்குமார், முன்னாள் மாவட்ட பதிவாளர் பாலு, வக்கீல் பசுமலை வாழ்த்தினர்.
91 வயது நிறைவடைந்த மூத்த பேராசிரியர் கமலாவிற்கு தொல்காப்பியர் விருது, பேராசிரியர் தாமரைக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது. தொல்காப்பியம், திருக்குறள் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சாகித்திய அகாடமி விருது பெற்ற தர்மன் சிறப்புரையாற்றினார். அவையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் ஒருங்கிணைத்தார். மணிமொழி நன்றி கூறினார்.