/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் கடற்படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி ஒத்திவைப்பு

ADDED : நவ 20, 2024 02:38 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடலில் சூறாவளி, கொந்தளிப்பால் இந்திய கடற்படை வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை விமானத் தளத்தில் உள்ள இந்திய கடற்படை வீரர்கள் தனுஷ்கோடி கடலில் நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருந்தனர். இதனால் அப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறை தடை விதித்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல் ராமேஸ்வரம் தீவு பகுதியில் மழை பெய்ததுடன் சூறாவளி வீசியது.
தனுஷ்கோடி கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. இதையடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை கடற்படை வீரர்கள் ஒத்திவைத்தனர்.