ADDED : பிப் 19, 2024 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்சின்னக்கீரமங்கலம் மேம்பாலத்தின் கீழ் செல்லும் சர்வீஸ் சாலையில் பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல ஆயிரம்வாகனங்கள் செல்கின்றன. திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் மேம்பாலம் உள்ளது. இப்பாலத்தின் அடியில் மதுரையில் இருந்து தேவகோட்டை செல்லும் பிரிவு சர்வீஸ் சாலையின் நடுவில் மெகா பள்ளம் உள்ளது.
டூவீலர்களில் செல்பவர்கள் இரவு நேரங்களில் நிலை தடுமாறி விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர். பெரிய விபத்துகள் ஏற்படும் முன் சர்வீஸ் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

