/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மலட்டாறு பாலத்தில் பல இடங்களில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
மலட்டாறு பாலத்தில் பல இடங்களில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
மலட்டாறு பாலத்தில் பல இடங்களில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
மலட்டாறு பாலத்தில் பல இடங்களில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : டிச 12, 2024 05:05 AM

சாயல்குடி: சாயல்குடியில் இருந்து கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
துாத்துக்குடியில் இருந்து சாயல்குடி, கீழக்கரை வழியாக தேவிபட்டினம், தொண்டி, கட்டுமாவடி வரை 2010ல் புதிதாக கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் பராமரிப்பு பணிகள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது.
கடந்த 2020 ஜன.,ல் கிழக்கு கடற்கரை சாலையில் மீண்டும் அதன் மேல் தார் ரோடு அமைக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கிழக்கு கடற்கரை சாலையில் பெரும்பாலான பகுதிகள் குண்டும் குழியுமாக பல இடங்களில் சேதமடைந்துள்ளது.
சாயல்குடியில் உள்ள 200மீ., நீளம் கொண்ட மலட்டாறு பாலத்தில் பல்வேறு இடங்களில் அரை அடி ஆழத்திற்கு மெகா பள்ளம் உருவாகியுள்ளதால் கார்களின் டயர்கள் சேதம் அடைகின்றன.
எனவே கிழக்கு கடற்கரை சாலையில் சேதமடைந்த இடங்களில் உரிய முறையில் பராமரிப்பு பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.